அன்பு பொறியாளர்களே

அனைவருக்கும் இனிய வணக்கம்.

பொறியாளர் கழகத்தின் முன்னாள் பொதுசெயலரும் மேற்பார்வைப் பொறியாளருமானபாெறிஞர். சீனி.சங்கரநாராயணன் அவர்கள் இன்று (06.01.2022) விருப்ப ஓய்வு பெற்று பணிவிடுப்பில் சென்றதை முன்னிட்டு பொறியாளர் கழகம் சார்பாக பாராட்டு விழா நடத்தப்பட்டது. மதிப்பிற்குரிய இயக்குனர் (உற்பத்தி) அவர்கள் விழாவிற்கு தலைமை வகித்தார். மதிப்பிற்குரிய தலைமைப் பொறியாளர் (திட்டமிடல்) அவர்கள் முன்னிலை வகித்தார். கிளைச் செயலர்கள் / தலைமை கழகம், சென்னை கிண்டி, திருச்சி மற்றும் நாகை மற்றும் மண்டல செயலர்/ தலைமையகம் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மைய செயற்குழு சார்பாக என்னுடன் துணைத்தலைவர் 2, பொருளாளர் மற்றும் செயலர் / உள்விவகாரம் கலந்து கொண்டனர்.

முன்னாள் தலைவர் பொறிஞர். கு.அப்பர்சாமி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மிக குறுகிய கால (3 மணி நேரத்திற்குள்) நம் அழைப்பை ஏற்று திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஓய்வு பெறும் பொறியாளரை வாழ்த்தினர்.

விருப்பு ஓய்வு குறித்த தகவல் கடைசி நேரத்தில் கிடைத்ததாலும் கோவிட் குறித்த நிலையாணைகளாலும் விழாவானது எளிமையாகவும் சிறப்பாகவும் இனிதே நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது நன்றிகள்

மேலும் விழாவில் கலந்து கொண்ட சங்கர நாராயணன் அவர்கள் துணைவியாருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் நம் நன்றிகள்.

பொறியாளர் கழகம் தனது முன்னாள் பொதுச்செயலரை நலமுடன் வாழ அன்புடன் வாழ்த்துகிறது💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

தி.ஜெயந்தி
பொதுச்செயலர்
தநாமிவா பொறியாளர் கழகம்